சம்மாந்துறை பிரதேச கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு..! - Sri Lanka Muslim

சம்மாந்துறை பிரதேச கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு..!

Contributors

சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த உதவி அவசியமான கலைஞர்களுக்கு உதவித்தொகை, காசோலையாக வழங்கும் நிகழ்வு நேற்று (12) பிரதேச செயலாளர் தேசபந்து எஸ். எல். எம். ஹனிபா தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறைசார்ந்த நான்கு கலைஞர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்படட்டது.

இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம். லத்தீப்,மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான்,எம்.வை நெளசானா,கலைஞர்கள் என குறிப்பிட்ட அளவானோர் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team