சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல் அரசாங்கத்தினை மாற்றும் தேர்தல் அல்ல - மாஹிர் » Sri Lanka Muslim

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல் அரசாங்கத்தினை மாற்றும் தேர்தல் அல்ல – மாஹிர்

ILM.Mahir

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

சம்மாந்துறை  பிரதேச சபை தேர்தல் அரசாங்கத்தினை மாற்றும் தேர்தல் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சம்மாந்துறையில் போட்டியிடுவது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் உரிமைகளை உரிமையோடு வென்றெடுப்பதற்கான யுக்தியை கட்சி கையான்டுள்ளது  என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தைக்காப்பள்ளி-05ஆம் வட்டாரத்தின்  வேட்பாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல் தொடர்பாக கருவாட்டுக்கல் பிரசேத்தில் நேற்று மகளிர் அமைப்புக்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவரது அமைச்சினால் 150 மில்லியனுக்கு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றி இன்னும் பல கோடி ரூபா நிதிகளை கொண்டு வந்து மேலும் பல்வேறு அபிவிருத்திகளை செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த நாட்டில் எந்த மூலையிலும் முஸ்லிம்களுக்கு ஒரு அநீதி ஏற்படுகின்ற போது அதனை தட்டிக்கேட்கும் உரிமை முஸ்லிம்களின் பெயரை தாங்கியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு  மாத்திரமே காணப்படுகின்றது. மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை அழிப்பதற்காக பல்வேறு பெயர்களில் காலத்திற்கு காலம் அரசியல் கட்சிகளை உருவாக்கி கொண்டு இன்று மக்களிடம் வாக்குகளை கேட்கின்றனர்.

இதில் யாரும் முஸ்லிம் கட்சி  என்ற பெயர் வைக்க முடியாமல் இருப்பதை நாம் அனைவரும் அறிந்த உண்மை தனி நபர்களை பார்க்காமல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த பிரதேச சபையின் ஆட்சியை செய்தவர்கள் புதிய வட்டாரப் பிரிப்பில் 44 ஆயிரம் வாக்காளர்கள் வாழ்கின்ற இப்பிரதேசத்தில் பல்வேறு அநீதிகளை ஏற்படுத்தியுள்ளனர். இவற்றை மாற்றியமைக்க வேண்டுமானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் மக்கள் பிரதேச சபையினை ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka