சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 24 வீடுகள் நிர்மாணம் ! - Sri Lanka Muslim

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 24 வீடுகள் நிர்மாணம் !

Contributors

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் மீள்குடியேற்றப்பட்ட பயனாளிகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 24 வீடுகள் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைய பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கும் நிகழ்வும் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். எம் ஹனிபா தலைமையில் நேற்று(17) நடை பெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்பமாக சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சம்மாந்துறை – 12, மல்வத்தை – 02 மற்றும் வீரமுனை – 01 மீள்குடியேற்ற கிராம சேவகர் பிரிவுகளில் நடைபெற்றது.

மேலும் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில்
2021 ஆம் ஆண்டிற்கு மல்வத்தை 01- 09
மல்வத்தை 02 – 03
வீரமுனை 01 – 09
வீரமுனை 04 – 01
சம்மாந்துறை 12 – 02 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகள் கட்டுமான பணிகளுக்கு
பத்து இலட்சம் ரூபாய் செலவில்
17 வீடுகளும் ஆறு இலட்சம் செலவில் 07 வீடுகளும் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல்.ஏ. மஜீட் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. அலியார் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team