சம்மாந்துறை மன்பஉல் ஹஸனாத் இஸ்லாமிய கற்கைகளுக்கான கலாபீட இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim

சம்மாந்துறை மன்பஉல் ஹஸனாத் இஸ்லாமிய கற்கைகளுக்கான கலாபீட இப்தார் நிகழ்வு

DSC05252

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

சம்மாந்துறை பௌஸ் மாவத்தை மலையடிக்கிராமம் -04 மன்பஉல் ஹஸனாத் இஸ்லாமிய கற்கைகளுக்கான கலாபீட மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் ஏற்பாட்டில் இன்று கலாபீட வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு மன்பஉல் ஹஸனாத் இஸ்லாமிய கற்கைகளுக்கான கலாபீடத்தின் தலைவர் மௌலவி எஸ்.ரீ.நியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர்; கலந்துகொண்டார்.

இதில் மன்பஉல் ஹஸனாத் இஸ்லாமிய கற்கைகளுக்கான கலாபீடத்தின் மாணவர்கள் விவகார கல்வி நடவடிக்கைக்கான பணிப்பாளர் மௌலவி எஸ்.ஏ.எம்.றமீஸ், மன்பஉல் ஹஸனாத் இஸ்லாமிய கற்கைகளுக்கான கலாபீடத்தின் அதிபர் எம்.எல்.சாதீக் ஹாபீஸ், மாஹிர் பவுண்டேசனின் தலைவர் வை.வீ.சலீம், ஆசிரியர்கள், மாணவிகள், உலமாக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மார்க்கசெற்பொழிவையும் துஆப் பிரத்தனையும் மன்பஉல் ஹஸனாத் இஸ்லாமிய கற்கைகளுக்கான கலாபீடத்தின் செயலாளர் மௌலவி ஏ.எம்.சிறாஜூதீன் நிகழ்த்தினார்.

DSC05252

DSC05241

Web Design by The Design Lanka