சம்மாந்துறை யுனிட்டி அணி சம்பியன் » Sri Lanka Muslim

சம்மாந்துறை யுனிட்டி அணி சம்பியன்

m99

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழகத்தின் 09ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அல்-அர்ஷத் வெற்றிக் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை யுனிட்டி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இச்சுற்றுப்போட்டி 05 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 06 வீரர்களை கொண்ட சுற்றுக்கு அம்பாரை மாவட்டத்திலிருந்து 24 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றி இறுதிசுற்றுக்கு சம்மாந்துறை வின் ஸ்டார் விளையாட்டுக் கழகமும், சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழகமும் தெரிவானது.

நாணையச் சுழச்சியில் வெற்றிபெற்ற சம்மாந்துறை வின் ஸ்டார் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்படுத்தாடி 5ஒவர் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 53ஒட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழகம் 4.4 ஒவர் நிறைவில் 06 விக்கெட்டினால் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற யுனிட்டி விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ஸாதீக் சிறந்த ஆட்டநாயகனாகவும், ஏ.வீ.முஸாபீக் தொடர் ஆட்ட நாயகனாகவும், இச்சுற்றுப் போட்டியின் சிறந்த அணித் தலைவராக சம்மாந்துறை வின் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.அஜ்மீர் ஆகியோர் தெரிவானார்.

இந்நிகழ்வு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பாளர் ஏ.எச்.எம்.புவாத் (ஜே.பீ) தலைமையில் நேற்று அல்-அர்ஷத் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம விருந்துனராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ.காதிர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.றபீக், சம்மாந்துறை ஈஸ்டன் ஜீவலரி உரிமையாளர் அப்துல் வஸீர், சம்மாந்துறை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எஸ்.எம்.பைசல் அமீன், அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.ஏ.மஜீட், விளையாட்டு கழகங்களின் பிரதிநிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்ற யுனிட்டி விளையாட்டுக் கழகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் காசோலையும், வெற்றிக் கிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்ற வின் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு ஐயாயிரம் ரூபாய் காசோலையும் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

m.jpg2 m.jpg2.jpg3 m.jpg2.jpg3.jpg6 m.jpg2.jpg5

Web Design by The Design Lanka