சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அதிநவீன கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைப்பு! - Sri Lanka Muslim

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அதிநவீன கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Contributors

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான அதிநவீன கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஷ் அஷ்ஷூரா, உலமா சபை போன்ற முச்சபைகளின் வழிகாட்டலின் கீழ், பொது மக்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சுமார் 01 கோடி ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் வைத்தியர் ஏ.இஸ்ஸடீன் தலைமையில், வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அப்துல் வாஜித், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம்.ஹனிபா, முச்சபைகளின் பிரதிநிதிகள் உலமாக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team