சம காலத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கான சரியான தலைமைத்துவம் றிசாட் பதியுதீன் தான் - ஜவாத் (video) » Sri Lanka Muslim

சம காலத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கான சரியான தலைமைத்துவம் றிசாட் பதியுதீன் தான் – ஜவாத் (video)

jawath

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ

நான் பல கூட்டங்களிலும் அதே போன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டங்களிலும் பல தடவைகள் கூறியிருப்பதானது.. நான் சிறந்த தலைமைத்துவத்தினை தேடிக்கொண்டிருக்கேன். ஆகவே எனக்கு எவர் சிறந்த தலைமையாக தெரிகின்றாரோ அவருடைய பக்கம் நான் சென்று விடுவேன். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒரு தலைமைத்துவம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது இன்னும் அவரவர்கள் அரசியல் அநாதைகளா என்ற கேல்வியினை எழுப்புகின்றது.

ஒரு தூர நோக்கு சிந்தனையுடன் நாம் பார்ப்போமானால் அமைச்சர் றிசாட் பதுர்டீனுக்குதான் இன ரீதியான தாக்குதல்கள் பரவலாக தொடுக்கப்படுகின்றது. தமிழ் இனம் சார்ந்த அமைப்புக்களாக இருக்கலாம், அல்லது சிங்கள இனம் சார்ந்த அமைப்புக்களாக இருக்கலாம் அமைச்சர் றிசாட் பதுர்டீனை மட்டுமே குறியாக வைத்து தாக்க முற்படுகின்றனர். றிசாட் பதுர்டீன் வில்பத்து காணியினை கொண்டு போய் அவருடைய வீட்டுக்குள் மூடி வைக்கவில்லை. காட்டுக்குள் வாழ்ந்து வெளியேற்றப்பட்ட மக்களை பாதைகளை அண்டிய பிரதேசத்தில் மீள் குடியேற்றியுள்ளார்.

இதுதான் அவர் ஏனைய சமூகங்களுக்கு செய்துள்ள இன ரீதியான பிரச்சனையாக பார்க்கப்படுவதோடு அரசியல் ரீதியாக அவரை ஒழித்து கட்ட வேண்டும் என களத்தில் குதித்துள்ளமைக்கான காரணமாகவும் அமைகின்றது.

முதன் முதலாக குடியேற்றப்படும் மக்கள் தெளிவான சூழ் நிலையிலும், எதுவித அபாயங்களும் இனி மேல் இடம் பெற மாட்டாது என்ற நம்பிக்கையுடன் குடியேற வேண்டும். அதைதான் அமைச்சர் றிசாட் செய்து கொடுத்துள்ளார். ஆகவே இப்படியான ஒரு விடயத்தினை மட்டும் வைத்து தூக்கி பிடித்து கொண்டு அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயலுவதானது அவர்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு சமகாலத்தில் சிறந்த தலைமைத்துவத்தினை வழங்க கூடியவர் என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் நீண்ட கால அங்கத்தவரும், கல்முனை பிரதேசத்தில் பெரும் தலைவர் அஸ்ரஃபுடைய காலம் தொட்டு செயற்பட்டு வந்த முக்கியமான முஸ்லிம் காங்கிரசின் அரசியல் புள்ளியும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டவருமான அப்துர் றஸ்ஸாக் ஜவாத் தெரிவிக்கின்றார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த முன்னாள் மாகான சபை உறுப்பினர்… ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனது உயிரிலும் மேலான தொடர்போடு இருந்த கட்சியாகும். அது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் என்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்றேன். எனது பொருளாதாரத்தை அதற்காக செலவழித்திருக்கின்றேன். என் தங்கையை இழந்திருக்கின்றேன்.

என் நேரத்தை இழந்திருக்கின்றேன். அது மட்டுமல்லாம் எனது வாழ்க்கையில் சந்தோசமாக வாழ வேண்டிய காலத்தை எல்லாம் அந்த கட்சிக்காக இழந்துள்ளேன். இந்த நிலையில்அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சகோதரர் ஹசன் அலி விலக்கப்பட்டது எனக்கு நினைத்துக் கூட  பார்க்க முடியாத அதிசயமும், ஜீரணிக்க முடியாத விடயமும் ஆகும். திட்டமிட்டு சதி செய்து, சத்தியம் செய்து கொடுத்து, வாக்குறுதிகள் மீறப்பட்டு அது நடந்துள்ளது. குறித்த விடயத்தில் தற்போதைய தலைமை அப்துர் ரவூப் ஹக்கீம் திட்டமிட்டு தொழுது, குர் ஆன் ஒதிவிட்டு நடந்து கொண்ட விடயமானது என்னை மிகவும் பாதித்த விடயமாக காணப்படுகின்றது.

இது வரை காலமும் பாருங்கள்.. முஸ்லிம் காங்கிரஸ் பெரும் கட்சியின் தலைமையான ரவூப் ஹக்கீம் பிழை என இது வரைக்கும் இந்த நாட்டில் உள்ள பொதுபலசேனா ஏன் கூறவில்லை.? பொதுபலசேனவும் அவரும் நண்பர்களாக இருகின்றார்கள். அமைச்சர் றிசாட் பதுர்டீன் இது வரைக்கும் பொது பல சேனாவிற்கு எதிராக ஐந்து வழக்குகளை தாக்கள் செய்துள்ளார். ஆகவே இதிலிருந்து தெளிவாக விளங்கிகொள்ளப்பட வேண்டிய விடயம் றிசாட்தான் சமூக ரீதியான போரட்டத்தினை தனது கையில் எடுதுக்கொண்டு தலைமை தாங்கி செல்கின்றார் என்பதும் அது அவருக்கு இருக்கின்ற அடையாளமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது. இதுவும் நான் அமைச்சர் றிசாட்டுனனும் அவருடைய கட்சியிலும் இணைந்து செயற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக  இருக்கின்றது.

அந்த அடிப்படையில்தான் நான் அவருடன் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற முடிவினை எடுத்துள்ளேன். இந்த நிலையில் இருந்து கொண்டுதான் நாங்கள் எல்லோரும் அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீமிடம் இருந்து முஸ்லிம் காங்கிரசினை மீட்டெடுக்க முடியும். இன்று முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், வெளியேறியர்கள் எல்லோரும் கூறுவது முஸ்லிம் காங்கிரசின் மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்தேயாகும். இதனை கருத்தியல் ரீதியாக பார்க்கப்போனால் முஸ்லிம் காங்கிரசிற்குள் இருக்கின்ற காமம், போதை போன்ற விடயங்களை எல்லாம் அகற்றி எறிந்து விட்டு இஸ்லாமிய சூழலை மீண்டும் கொண்டு வந்து அங்கே எல்லோரும் சேர்ந்து செயற்பட கூடிய ஒரு பொதுக்கட்சியாக உருவாக்க வேண்டும். அதற்கும் மசூரா அடிப்படையில் ஒரு தலைமைத்துவ குழுவுக்கான தலைமையினை உருவாக்க வேண்டும். தனிப்பட்ட ஒருவரின் கையில் இனி மேலும் சமூக விடுதலைக்காக உருவாக்கப்பட்ட எமது கட்சியினை கொடுக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்திற்காக தலைமை தாங்குகின்ற கட்சிக்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அங்கத்துவம் மிகக் கட்டாயமாக இருக்க வேண்டும். முடிவெடுக்கின்ற மசூரா குழுவில் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருந்தும் ஒருவர் அங்கத்தவராக செயற்பட வேண்டும். அந்த மசூரா குழுவின் தலைமைத்துவம் காலத்துக்கு ஏற்றவாறு சுழற்சி முறையில் மற்றவர்களின் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும். ஆகவே இனிமேலும் எங்களுடைய மக்களின் உரிமைகளை தனிப்பட்ட ஒரு நபரின் கைகளுக்குள் அடக்கி வைத்திருக்க முடியாது.

எனவே தான் சமகாலத்தில் முஸ்லிம் களுக்கான சரியான தலைமை அகில இலங்கை மக்கள் காங்கிரின் தலைமையான றிசாட் பதுர்டீன் என்பது தெளிவான விடயமாக பார்க்கப்படுகின்றது. பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃபின் இடத்திற்கு எவரையும் கொண்டு வந்து நிறுத்தி விடவோ அல்லது எவரையும் அவருக்கு நிகராக அழகு பார்த்திடவோ முடியாது. ஆனால் இப்பொழுது இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குள் அமைச்சர் றிசாட் பதுர்டீன் முஸ்லிம் சமூகத்திற்கான தலைமைத்துவத்திற்கு தகுதியானவர் என்பதில் என்னிடமோ தூர நோக்கு சிந்தனை உள்ள முஸ்லிம் ஆரசியல் விமர்சகர்களிடமோ மாற்றுகருத்திருக்க முடியாது என்பதே உண்மையான விடயமாக உள்ளது என தெரிவித்தார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்.

அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிமைக்கான காரணம்.?, கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம், தமிழர்களுடைய அரசியல், சுய நிர்ணய அபிலாசைகள் சம்பந்தமான உங்களுடைய கருத்து, முஸ்லிம் காங்கிரசின் தலைமை அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீம் டயஸ் போராவுடன் இணைந்து செயற்படுவதாக கூறப்படும் கருத்தில் இருக்கின்ற உண்மை.? பணத்திற்கு நீங்கள் விலை போய்விட்டதாக கூறப்படுகின்ற விடயத்தில் இருக்கின்ற உண்மை.? கிழக்கிற்கு ஏன் கிழக்கில் இருந்து தலைமைத்துவம் வர வேண்டும். சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை போராட்டத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்.? போன்ற முக்கிய பல கேள்விகளுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் கூறிய விரிவான பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka