சரச்சையில் 2022 கட்டார் உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டி - Sri Lanka Muslim

சரச்சையில் 2022 கட்டார் உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டி

Contributors

2022ம் ஆண்டின் உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடர் தொடர்பில், சர்வதேச காற்பந்து சம்மேளனம் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

 

முன்னதாக இந்த போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக,  கட்டாரின் காற்பந்து சம்மேளனம், உயர் அதிகாரிகளுக்கு கையூட்டல்களை வழங்கி இருந்ததாக குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக பரிபூரண விசாரணையை நடத்துமாறு, போட்டித் தொடருக்கான பிரதான அனுரசணையாளர்கள் அழுத்தம் வழங்கி இருகின்றனர்.

 

கட்டார் மீதான இந்த குற்றசாட்டு உறுதி செய்யப்படுமாக இருந்தால், போட்டிகளை நடத்தும் நாட்டை தெரிவு செய்வதற்கு மீண்டும் வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் இந்த கோரிக்கைக்கு சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் பிரதி தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று, 2022ம் ஆண்டு உலக கிண்ண காற்பந்து போட்டிகள் தொடர்பில், கட்டார் மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

 

இதன்படி, காற்பந்து போட்டிகளை நடத்தும் வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்காக, கட்டாரின் காற்பந்து சம்மேளன பிரதி தலைவர், கட்டாரின் அரச குடும்பம் உள்ளிட்ட தமது உயர் மட்ட தொடர்புகளை பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இதற்காக ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் எரிவாயு உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக, பல்வேறு மின்னஞ்சல்களின் ஆதாரங்களுடன் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team