சரணடைந்தால் தான் முன் ஜாமீன்! - பவர் ஸ்டாருக்கு ஐகோர்ட் உத்தரவு. » Sri Lanka Muslim

சரணடைந்தால் தான் முன் ஜாமீன்! – பவர் ஸ்டாருக்கு ஐகோர்ட் உத்தரவு.

powerstar-221013-150

Contributors

மோசடி வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெறுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கார் எண்ணை மாற்றி விற்று மோசடி செய்துள்ளதாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அதிகாரி திருத்தங்கல் போலீசில் அளித்த புகாரின் பேரில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், ஜோதிராஜன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாததால், கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இதனால் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பவர்ஸ்டார் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், மனுதாரர் மீது சிவகாசி கோர்ட்டில் பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது. இதனால், மனுதாரர் சிவகாசி கோர்ட்டில் சரண் அடைய வேண்டும். அங்கு ஜாமீன் கேட்டு அவர் மனுத்தாக்கல் செய்யலாம். அப்படி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனுவை மாஜிஸ்திரேட் விசாரித்து, அன்றே உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Web Design by The Design Lanka