சர்வகட்சி அரசாங்கம்; ரணிலின் அழைப்பை ஏற்ற சஜித் - 5 ஆம் திகதி சந்திப்பு! - Sri Lanka Muslim

சர்வகட்சி அரசாங்கம்; ரணிலின் அழைப்பை ஏற்ற சஜித் – 5 ஆம் திகதி சந்திப்பு!

Contributors

சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அது தொடர்பிலான ​பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்வரும் 5 ஆம் திகதியன்று அவர் சந்திக்கவுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team