சர்வதேச அளவில் 3 கோடி பேர் கொத்தடிமைகள்! - Sri Lanka Muslim

சர்வதேச அளவில் 3 கோடி பேர் கொத்தடிமைகள்!

Contributors

லண்டன்: உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, உலக அளவில் சுமார் மூன்று கோடி பேர் இன்னும் கொத்தடிமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது.

“உலக அடிமைகள் பட்டியல் 2013” என்ற இந்த அறிக்கை, இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.

ஆனால் மவுரிடேனியாவில் மட்டும் இந்தப் பிரச்னை மிகவும் அதிகமாக நிலவுவதாகக் கூறும் இந்த அறிக்கை, அந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையில் நான்கு சதவீதத்தினர் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்று கூறுகிறது.

அடிமை முறையை ஒழிக்க அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நாடு மாறுபடுவதாக அது கூறுகிறது. ஆஸ்திரேலியாவின், அடிமை முறைக்கு எதிரான ஆஸ்திரேலிய அமைப்பான, வாக் ஃப்ரீ பவுண்டேஷன் இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறது.

 

Web Design by Srilanka Muslims Web Team