சர்வதேச இளம் பெண் ஆளுமைகளின் பட்டியலில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இம்ஆன் ஜூபீர் தெரிவு..! » Sri Lanka Muslim

சர்வதேச இளம் பெண் ஆளுமைகளின் பட்டியலில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இம்ஆன் ஜூபீர் தெரிவு..!

Contributors
author image

Editorial Team

 

சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட வளர்ந்து வரும் ஓவிய கலைஞரான இம்ஆன் ஜூபீர் சர்வதேச The wow foundation நிறுவனத்தினால் உலகில் ஒவ்வொரு துறைகளிலும் ஆளுமை நிறைந்த இளம் பெண்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இம்ஆன் நமது பகுதியில் அறியப்பாடாதவராய் இருப்பது நமது துரதிர்ஷ்டமே.

இம்ஆன் ஜூபீர் ஒரு மாணவரும், முழுநேர இலத்திரனியல் ஓவிய கலைஞருமாவார்.

இம்ஆன் தனது பதினான்கு வயதிலிருந்து வரையத் தொடங்கினார். அவரது ஓவியம் மீதான ஆர்வம் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே செல்கிறது,

மேலும் இம்ஆன் குறுகிய இடைவெளியில் realism, hyperrealism, surrealism, contemporary, abstract, ceramic painting, illustration, and digital art மற்றும் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டார். Graphite மற்றும் Charcoal உடனான அவரது அதிசயமான யதார்த்தமான ஓவியங்களை வரைவதில் இப்போது கவனம் செலுத்தியுள்ளார்.

இம்ஆன் தனது திறமைகளைப் பயன்படுத்தி சமூகத்திற்கு பயனுள்ள ஒன்றைச் செய்யவதற்கு அவர் எத்தனித்துக் கொண்டிருப்பதை அவரது ஓவியங்கள் பேசுகின்றன,

இந்த சமூகத்தில் நடைபெறும் அத்தனை வன்மங்களையும் அவர் ஓவியங்கள் ஊடாக பேசூகிறார். அதனூடாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

அவர் தனிநபர்களின் விரும்பங்களுக்கு ஏற்றவாறும் ஓவியங்களை வரைந்து கொடுப்பதும் குறிப்பிடத் தக்கது.

வாழ்த்துக்கள் இம்ஆன் ஜூபீர்

FB_IMG_1602433912496 FB_IMG_1602433909313

Web Design by The Design Lanka