சர்வதேச ஜனநாயக தினம் இன்று! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

ஜனநாயக கோட்பாடுகளை ஊக்குவிப்பதனையும் அதனை நிலைநிறுத்துவதையும் நோக்காகக் கொண்டு சர்வதேச ஜனநாயக தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
 
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளன.
 
ஜனநாயகத்தில் இளையோரை ஈடுபடுத்துதல் என்பதே இம்முறை சர்வதேச ஜனநாயக தினத்தின்    தொனிப்பொருளாக  அமைந்துள்ளது.
 
உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என   சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team