சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை விசாரிக்க முடியாது! - பணிப்பாளர்அஹமட் பா - Sri Lanka Muslim

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை விசாரிக்க முடியாது! – பணிப்பாளர்அஹமட் பா

Contributors

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும்அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை என அந்த நீதிமன்றத்தின் வழக்குகள் தொடர்பான பணிப்பாளர்அஹமட் பா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து அவர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கருத்தரங்கொன்றில்அமெரிக்காவின் ஹூவர் அமைப்பின் பிரதிநிதியான துங்குவரதராஜன் இந்த கோரிக்கையைவிடுத்திருந்தார்.

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் இணக்கப்பாடுகளில்கையெழுத்திடவில்லை என்பதால் நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாது என அஹமட் பா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இனப்படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின்பிரதிநிதி ஹெடாட சீன்,அஹமட் பாவின் கருத்தை ஆமோதித்துள்ளார்

2002ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்க குறித்த ரோம் உடன்பாட்டில்கைச்சாத்திடுவதை நிராகரித்தார்.

எனினும் 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க இந்த உடன் பாட்டில் கையெழுத்திட மறுத்ததாக ஞாயிறு திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. (tti)

அதேவேளை வெளிநாடுகளில் உள்ள புலிகளின் உறுப்பினர்களான உருத்திரகுமாரன்,அடேல் பாலசிங்கம்,நெடியவன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரோம் உடன்பாட்டில்கையெழுத்திடுமாறு வெளிநாட்டில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரியதாகவும்அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிகைரித்து விட்டதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள எந்த நாடும் ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றும் திவயின கூறியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team