சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு, பல்வேறு நீர் விநியோகத் திட்டங்கள்.சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு, பல்வேறு நீர் விநியோகத் திட்டங்கள். - Sri Lanka Muslim

சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு, பல்வேறு நீர் விநியோகத் திட்டங்கள்.சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு, பல்வேறு நீர் விநியோகத் திட்டங்கள்.

Contributors

அஷ்ரப் ஏ சமத்)

தேசிய நீா் வழங்கள் வடிகாலமைப்புச் சபை எதிா்வரும் சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு

நீர் விநியோகத் திட்டங்களை நாட்டில் அமுல்படுத்தி அபிவிருத்தி செய்து வருகின்றது. இத்திட்ங்களில் 61 சமுக நீர்விநியோகத் திட்டமும், நனோ சுத்தமான குடி நீர் 69 திட்டங்களும் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேற்கண்டவாறு 17ஆம் திகதி நீர்விநியோக வடிகலாமைப்பு அபிவிருத்தி அமைச்சா் வாசுதேவ நானயக்கார அவா்களது அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தாா்.அமைச்சா் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் –

மேற்படி 130 திட்டங்களினால் 33,599 குடும்பங்கள் நன்மையடைய உள்ளனா், இதற்காக 1,015.19 மில்லியன் ருபாவை இலங்கை அரசும் வெளிநாட்டு நிதி கடன் திட்டங்கள் ஊடாக செலவு செய்து வருகின்றது.எதிா்வரும் மாா்ச் 22ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் வவுனியா உட்பட பல்வேறு நீர் விநியோகத் திட்டங்கள் திறந்து வைக்கப்படஉள்ளன. ததுருஓயா நீர்விநியேகத்திட்டம் 97,00 மக்கள், நன்மையடைகின்றன, 10,227 மில்லியன் கந்தானை நீர்விநியோகத் திட்டம், 600 மில்லியன் ருபா 23,000 மக்கள் , நிட்டம்புவ நீா்விநியோகத் திட்டம், 11,795 மி, 63,200 மக்கள், நன்மை, யாழ்ப்பாண நீர் விநியோகம், 100,000 மக்கள், நாகதீப கடற் பிரதேச 2500 மக்களுக்கு 230.72 மில்லியன் ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீர்விநியோகம் வெசாக் தினத்தில் பிரதம மந்திரியினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும், வவுனியாவில் 100,000 இலட்சம் மக்கள் நன்மையவதற்காக 6291 மில்லியன் ருபா செலவளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கடற்பிரதேச மேலும் ஒரு நீர்விநியோகத்திட்டம் 300,000 மக்கள் நன்மையடைவா் இதற்காக 17,256 மில்லியன் ருபா செலவழிகக்ப்பட்டுள்ளது. இதனை விட கொழும்பு மாவட்டத்தில் 150 வருடங்கள் பழமைவாய்ந்த இரும்பு நீர்குழாய்கள் அகற்றப்பட்டு புதிதாக நில அடியில் குழாய்கள் பொறுத்தப்பட்டு சுத்தமான நீர் வழங்குவதற்கான தி்ட்டம் நடைபெற்று வருகின்றென அமைச்சா் வாசுதேவ நானயக்கார தெரிவித்தாா்.

Web Design by Srilanka Muslims Web Team