சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஹம்ஸா பின்லேடனைச் சேர்த்தது அமெரிக்கா » Sri Lanka Muslim

சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஹம்ஸா பின்லேடனைச் சேர்த்தது அமெரிக்கா

hamza

Contributors
author image

Editorial Team

அல்-கைதாவின் முன்னாள் தலைவரான பின் லேடனின் மகன் ஹம்ஸா பின் லேடனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாகச் சேர்த்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அல்-கைதா இயக்கத்தின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டவர் ஹம்ஸா பின் லேடன். அதையடுத்து, இருபது வயதான அவர் மேலைத்தேய நாடுகளின் தலைநகரங்களில் தாக்குதல் நடத்தவேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தார்.

இதேவேளை, அல்-கைதா இயக்கத்தின் அடுத்த தலைவராக உருவாகலாம் என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையிலேயே அவரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மேலும், ஹம்ஸா பின்லேடன் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டவர் என்றும், அமெரிக்காவுடன் எந்தவிதமான வர்த்தகத்திலும் அவர் ஈடுபடக்கூடாது என்றும், அமெரிக்காவில் அவர் எந்தவிதமான சொத்துக்களையும் வைத்திருக்கக்கூடாது என்றும் அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka