சர்வதேச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜம்இயத்துல் உலமா கவனம் செலுத்துமா ? - Sri Lanka Muslim

சர்வதேச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜம்இயத்துல் உலமா கவனம் செலுத்துமா ?

Contributors

நாட்டில்   முஸ்லிம் நபர்களினால் இயக்கப்படும் சில  சர்வதேச பாடசாலைகளில் இன்னும் இஸ்லாமிய பண்பாட்டுக்கு   முரணான முறையில் சீருடை அணித்து மாணவிகள் செல்லும் மோசமான நிலை தொடர்வதாகவும், இஸ்லாமிய

பண்பாட்டுக்கு  முரணான சில நிகழ்சிகளும் இடம்பெறுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் இன்று பல பாகங்களிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் ஆங்கில மொழி   சர்வதேச பாடசாலைகளுக்கு பெற்றோர் தமது குழந்தைகளை கூடுதலாக அனுமதிக்கும்  நிலையில் அதில் முஸ்லிம்கள் முன்னணி வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது சில முஸ்லிம் பகுதிகளில்  இயங்கும் சில சர்வதேச பாடசாலைகளின் மாணவிகளின் சீருடையும்  முழுமையாக இஸ்லாமிய பண்பாட்டுக்கு  உட்படாத முறையில் அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில முஸ்லிம் சர்வதேச பாடசாலைகளில் இஸ்லாமிய பண்பாட்டுக்கு முரணான நிகழ்சிகள் இடம்பெறுவதாகவும், சீருடை ஹிஜாப்புடன் காணப்பட்டாலும் இரு கைகளின் பெரும்பகுதி மூடப்படாத நிலையில் உள்ளதாகவும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கவனம் செலுத்திய வேண்டியவர்கள் தொடர்ந்தும் தவரிவரும்போது  இஸ்லாமிய பண்பாட்டு தனித்தன்மையை இழக்க வேண்டியேற்படலாம். பொதுவாக இப்படசாலைகளில் ஆங்கில மொழிக்கூடாக மேற்கத்தேய கலாசாரமும் ஆடம்பர மோகமும் ஊட்டப்படுகின்றது . இஸ்லாமிய தனித்து வத்தை பாடசாலைச் சூழலில் பேணும் நிலை அரிதாகவே உள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா விசேட  கவனம் செலுத்தாது இருப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்  இந்த நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் மோசமான பண்பாட்டு பிறழ்வை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள்  அச்சம் தெரிவித்துள்ளனர் .

கொழும்பு,  நீர்கொழும்பு கண்டி,  மாத்தளை  மாவட்டங்களில்  இப்படியான  சர்வதேச  முஸ்லிம் பாடசாலைகள் உள்ளதாகவும்  ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்,  இது தொடர்பில் ஜம்இயத்துல் உலமா போதிய கவனம் செலுத்திய வேண்டும், சர்வதேச பாடசாலை முஸ்லிம் நிர்வாகிகளையும் முஸ்லிம் சமூகத்திலுள்ள கல்வியாளர்களையும்  இணைந்து பணியாற்ற ஜம்இயத்துல் உலமா முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் .

அதன் இறுதி முயற்சியாக இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்தில் பயணிக்க தயாரான பாடசாலைகளை  ஜம்இயத்துல் உலமா சமூகத்துக்கு அடையாளம் காட்டவேண்டும்  .  என்றும்   சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர் .

Web Design by Srilanka Muslims Web Team