சர்வதேச விசாரணைகள் அவசியமில்லை!: யாழ். பௌத்த சங்கம் ! - Sri Lanka Muslim

சர்வதேச விசாரணைகள் அவசியமில்லை!: யாழ். பௌத்த சங்கம் !

Contributors

இலங்கை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் அவசியமில்லை என யாழ் தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் அருள் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், போர் குற்றம் குறித்து விசாரணை

நடத்தப்படுமாயின் அது இருத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை விசாரிப்பதாக இருக்க வேண்டும்.

யுத்தம் ஒன்று நடைபெறும் போது அதில் ஈடுபடும் இரண்டு தரப்பையும் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவார்கள். அத்துடன் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படும். இதனை தவிர்க்க முடியாது.போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அவர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனரா அல்லது புலிகளினால் கொல்லப்பட்டனரா என்பதை குறிப்பிட்டு கூறமுடியாது.

இராணுவத்தினர் பொதுமக்களை பணயமாக வைத்திருக்கவில்லை. அவர்களை கேடயங்களாக பயன்படுத்தவில்லை. எனினும் விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்திக் கொண்டனர்.

இப்படியான சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அந்த பழியை இராணுவத்தினர் மீது சுமத்த முடியாது. பொதுமக்கள் எப்போதும் போரை விரும்பியதில்லை. புலிகள் அவர்களை பலவந்தமாக போருக்குள் இழுத்தனர்.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ள கருத்துக்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது ஒரு வகையான வன்மமான கருத்தாகும் என தெரிவித்துள்ளார் .

யாழ்பாணத்தில் யாழ் தமிழ் பௌத்த சங்கம் என்று ஒன்று செயல்பட்டு வருவதுடன் பெளத்த வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Web Design by Srilanka Muslims Web Team