சர்வதேச விசாரணையினை ஒருபோதும் இலங்கை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை : சமரசிங்க - Sri Lanka Muslim

சர்வதேச விசாரணையினை ஒருபோதும் இலங்கை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை : சமரசிங்க

Contributors

இலங்கை விவ­காரம் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை நடத்­து­வ­தனை இலங்கை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இது ஆரம்­பத்தில் இருந்தே இலங்­கை­யிடம் காணப்­பட்ட நிலைப்­பா­டாகும். ஒரு­போதும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இணங்­க­மாட்டோம் என்று பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­சரும் மனித உரி­மைகள் குறித்த ஜனா­தி­ப­தியின் விசேட தூது­வ­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

 பிரிட்டன் பிர­தமர் டேவிட் கமரூன் இலங்கை தொடர்பில் தெரி­வித்­துள்ள கருத்­துக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறி­ய­தா­வது,
பிரிட்டன் பிர­தமர் இலங்கை வரு­வ­தற்கு முன்னர் லண்­டனில் 7 க்கும் மேற்­பட்ட தமிழ்க் குழுக்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­விட்டே இலங்கை வந்து இந்தக் கூற்றை வெளி­யிட்டார். அந்­த­வ­கையில் அது பண்­பான விடயம் அல்ல. பிரிட்டன் பிர­தமர் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்­ளவே இலங்கை வந்தார்.
மாறாக இலங்­கையின் விவ­கா­ரங்­களை கையாள வர­வில்லை. இதனை அன­வைரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். பொது­ந­ல­வா­யத்தை பயன்­ப­டுத்தி பிரிட்டன் பிர­தமர் இலங்­கைக்கு எதி­ராக அர­சியல் செயற்­பாட்­டையே முன்­னெ­டுத்­துள்ளார்.
இலங்கை தற்­போது கால­னித்­துவ நாடு அல்ல என்­ப­தனை டேவிட் கமரூன் மறந்­து­விட்டார். இது கால­னித்­துவ நாடு அல்ல. இலங்கை சுயா­தீன நாடாகும். சுயா­தீ­ன­மான எந்த நாட்­டுக்கும் எவரும் வந்து திகதி நிர்­ணயம் செய்ய முடி­யாது. இது அச்­சு­றுத்­த­லாகும்.
அப்­ப­டி­யானால் பிரிட்டன் குறித்து நாங்­களும் கேள்­வி­களை எழுப்­பலாம். பிரிட்­டனில் எத்­த­னையோ விசா­ர­ணைகள் தாம­த­மா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அப்­ப­டி­யானால் மற்­று­மொரு நாடு பிரிட்­ட­னுக்கு எதி­ராக திகதி நிர்­ணயம் செய்­யலாம்.
இதே­வேளை யுத்த முடிவின் பின்னர் இலங்­கையில் பரந்­து­பட்ட நல்­லி­ணக்­கத்தை அடைய நாங்கள் வேலை செய்­து­வ­ரு­கின்றோம். அதனை குறு­கிய காலத்தில் செய்ய முடி­யாது. அதற்கு காலம் தேவை­யாகும். போருக்குப் பின்­ன­ரான சூழலில் அர­சாங்கம் ஒரு இடத்தில் முடங்கி இருக்­க­வில்லை.
பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இன்னும் செய்­வ­தற்கு பல வேலைத்­திட்­டங்கள் உள்­ளன. இதற்கு காலம் தேவை­யாகும். ஆனால் இவ்­வாறு நாட்­டுக்குள் வந்து அச்­சு­றுத்­தலை மேற்­கொண்டு செல்­வது மிகப்­பெ­ரிய அநீ­தி­யாகும்.
யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான நிலை­மையில் நாங்கள் ஒரு இடத்தில் நின்­று­வி­ட­வில்லை. அந்த வகையில் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை நடத்­து­வ­தனை இலங்கை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இது ஆரம்­பத்தில் இருந்தே இலங்­கை­யிடம் காணப்­பட்ட நிலைப்­பா­டாகும்.
ஒரு­போதும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இணங்­க­மாட்டோம். எமது உள்­நாட்டு விசா­ரணை ஒன்று இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதனை நிறை­வு­ப­டுத்த எமக்கு காலம் தேவை­யாகும். அந்த பய­ணத்தை செல்வோம். ஆனால் சர்­வ­தேச விசா­ரணையை ஏற்­க­மாட்டோம்.
எமது உள்­நாட்டு விசா­ர­ணையை ஆரம்­பித்­துள்ளோம். அதனை கொண்டு நடத்­து­கின்றோம். அதற்கு காலம் தேவை­யாகும். அந்த விசா­ர­ணையில் கூட சாட்­சிகள் இருந்­தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இறந்தவர்களை மீண்டும் எழுப்பி சாட்சியம் பெற முடியாது. எனினும் விசாரணைக்கு முயற்சிக்கின்றோம்.
எமது பக்கத்தில் யாராவது தவறுகளை செய்திருந்தால் அதனை அனுமதிக்க மாட்டோம். அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். ஆனால் எதற்கும் சாட்சிகள் இருக்கவேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team