சற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் - Sri Lanka Muslim

சற்றுமுன் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

Contributors

முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்த்மானி அறிவிப்பு வெளியுறவு அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

23,746 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதி காட்டு யானை மேலாண்மை வனப்பகுதியாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், குறித்த நிலப்பகுதியில் விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள 866 ஹெக்டேர் நிலப்பகுதி அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனபகுதி ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உரிய ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, லுனுகம்வெஹெர மற்றும் தணமல்வில ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் குறித்த காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி அமைந்துள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு கோரி சூரியவெவ பகுதியில் உள்ள விவசாயிகள் 86 நாட்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் கீழே…

Web Design by Srilanka Muslims Web Team