சவளக்கடை பொலிஸ் சவால் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுசுற்றுப் போட்டி » Sri Lanka Muslim

சவளக்கடை பொலிஸ் சவால் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுசுற்றுப் போட்டி

p66

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

தேசிய சமூக சேவை மாத்தினை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் சவால்; கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்.

இப்போட்டியானது 5ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இறுதி சுற்றுக்கு வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகமும், 12ஆம் கொளனி பிரண்ஸ் விளையாட்டுக்கு கழகமும் தெரிவானது.

நாணையச் சுழச்சியில் வெற்றிபெற்ற வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 5ஒவர் நிறைவில் 4விக்கட்களை இழந்து 64ஒட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 12ஆம்; கொளனி பிரண்ஸ் விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கட்களையும் இழந்து 4.1 ஒவர் நிறைவில் 40 ஒட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

சிறந்த தொடர் ஆட்டநாயகனாக வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த வீரர் எம்.எம். பாஹாத், சிறந்த துடுப்பாட்ட வீராக வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த வீரர் எஸ்.றிபாஸ், சிறந்த பந்து வீச்சாலராக 12ஆம் கொளனி பிரண்ஸ் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த வீரர் ஏ.சீ.இர்பான் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.தம்பிக்க பியந்த, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜெ.எஸ்.கருணாசிங்க, நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

p p-jpg2 p-jpg2-jpg3-jpg4

Web Design by The Design Lanka