சவாலான போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதல் - Sri Lanka Muslim

சவாலான போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

Contributors

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆறாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.  7 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இந்திய அணி 1– 2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இதனால் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய  ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது.

இரண்டாவது போட்டியில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும், 4–வது போட்டி பாதியிலும், 5–வது போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமலும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இன்றைய ஆட்டத்தில் வென்றால் அவுஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றிவிடும். இந்த நிலையில் வெற்றியாருக்கு என்ற எதிர்பார்ப்புடன் ஆட்டம் இன்று துவங்குகிறது.

Web Design by Srilanka Muslims Web Team