சவுதிஅரேபியாவில் வேலைக்கார பெண்ணை கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை - Sri Lanka Muslim

சவுதிஅரேபியாவில் வேலைக்கார பெண்ணை கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை

Contributors

சவுதி அரேபியாவில் துபாயில் உள்ள அரசு அதிகாரி வீட்டில் இந்தியாவை சேர்ந்த 40 வயது வாலிபர் ஒருவர் சமையல்காரராக இருந்தார். இவர் தங்கியிருந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் ஒரு பெண் வேலைக்காரி ஆக இருந்தாள்.

அப்போது இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே அப்பெண் கர்ப்பம் அடைந்தாள். அதற்கு இந்திய வாலிபர்தான் காரணம் என கூறினாள்.

 

 

கர்ப்பத்துக்கு தான் காரணமல்ல என இந்திய வாலிபர் மறுத்தார். ஆனால் அப்பெண்ணோ நீ என்னை கற்பழித்து விட்டாய் என புகார் செய்வேன் என மிரட்டி வந்தாள்.

 

 

இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய வாலிபர், அவள் வேலை பார்த்த வீட்டுக்குள் புகுந்து வேலைக்கார பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்தார். பிணத்தை தண்ணீர் தொட்டிக்குள் வீசி மறைத்தார்.

 

 

பின்னர் வீட்டுக்கு தீவைத்து தடயங்களை அழித்தார். ஆனால் தீயில் தண்ணீர் தொட்டி மட்டும் சேதமடையாததால் பெண்ணின் பிணத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்திய வாலிபரை கைது செய்தனர்.

 

 

இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team