சவுதியில் இருந்து 2,400 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்..! - Sri Lanka Muslim

சவுதியில் இருந்து 2,400 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்..!

Contributors

இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் சவுதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வர எதிர்ப்பார்த்துள்ள 2,400 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும் 1,800 பேர் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ளதாகவும் அந்நாட்டு இலங்கைக்கான தூதுவர் மதுக்க விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்களில் அவசர வைத்திய சிகிச்சை பெற வேண்டியுள்ளவர்கள், மாணவர்கள் மற்றும் வயோதிபர்கள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கவிருப்பதாகவும், நோய் வாய்ப்பட்டுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் வரையில் தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்கு தூதுவராலயம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்த இலங்கையர்கள் சிலருக்கு மீண்டும் வேலை வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by Srilanka Muslims Web Team