சவுதியில் குளிரைப்போக்க பயன்படுத்திய நலக்கரி விஷமானதால் இலங்கையர் ஒருவர் வபாத்; கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் - Sri Lanka Muslim

சவுதியில் குளிரைப்போக்க பயன்படுத்திய நலக்கரி விஷமானதால் இலங்கையர் ஒருவர் வபாத்; கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில்

Contributors

 

சவூதி அரேபியாவில் நிலக்கரியைப் பயன்படுத்தி சூடாக்கியபோது வெளியான வாயு நச்சானதில் இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் ஆபத் தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவனல்ல அரநாயக்க திப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொகமட் அனஸ் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விபரங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரங்களை யும் வெளிவிவகார அமைச் சின் ஊடாகக் கோரியிருப்ப தாக வெளி நாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தனிய தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, சவூதி அரேபியாவில் தற்பொழுது கடுமையான குளிர் கால நிலை நிலவி வருவதால் தாம் தங்கியிருந்த அறையில் சூடேற்றும் சாதனத்தையும், நிலக்கரியைப் பயன்படுத்தி சூடாக்கிவிட்டு உறங்கியுள்ளனர். நிலக்கரி சூடாக்கியிலிருந்து வெளியான வாயு நஞ்சானத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் இலங்கை யைச் சேர்ந்தவர். மற்றையவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்து ள்ளது. இச்சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் கிங் கஹல்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team