சவுதியில் 11 இளவரசர்கள் கைது » Sri Lanka Muslim

சவுதியில் 11 இளவரசர்கள் கைது

sa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ரியாத்: ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2009ல் ஜெட்டா நகரில் வெள்ளதடுப்பு பணியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் விசாரணை துவங்கிய நிலையில், முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி பொது மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தவதை தடுக்கவும், ஊழல் செய்த நபர்களை தண்டிப்பதே விசாரணை கமிஷனின் நோக்கம் என அந்நாட்டு மீடியாவில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் அந்நாட்டு கோடீஸ்வரரான அல் வலீத் பின் தலாலும் ஒருவர் ஆவார்.

Web Design by The Design Lanka