சவுதியில் 23 முக்கியஸ்தர்கள் அதிரடிக் கைது: ஊழல் தொடர்பில் சவுதி மன்னர் சொன்ன வார்த்தைகள் » Sri Lanka Muslim

சவுதியில் 23 முக்கியஸ்தர்கள் அதிரடிக் கைது: ஊழல் தொடர்பில் சவுதி மன்னர் சொன்ன வார்த்தைகள்

sau

Contributors
author image

Editorial Team

 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் மெக்காஹ் மாகாணத்தில் செங்கடலை ஒட்டியுள்ள ஜெட்டா நகரில் மழையால் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் அதிகாரிகளால் சரிசெய்ய முடியாததால் பொதுமக்கள் 122 பேர் பலியாயினர்.

ரியல் எஸ்டேட் முறைகேடுகள் கட்டிட தொழில் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடியதே வெள்ளம் ஏற்பட காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஏற்கனவே 45 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊழல் எதிர்ப்பு குழுவுக்கு அந்நாட்டு மன்னர் முஹமது பீன் சல்மான் தலைமை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் பொறுப்பேற்ற மறுகணமே தேசிய காவல்படைத்தலைவர், பொருளாதத்துறை அமைச்சர், கடற்படை தளபதி ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் ஜெட்டா வெள்ளம் தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்சம் குற்றச்சாட்டில் இளவரசர்கள் 11 பேரும் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் என 12 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மிகப்பெரும் பணக்காரருக்கு இளவரசருமான அல் வலீத் பின் தலாலும் ஒருவராவார்.

“அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் தப்ப முடியாது” என்று மன்னர் முஹமது பீன் சல்மான் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka