சவுதி அமைச்சர் விடுவிப்பு » Sri Lanka Muslim

சவுதி அமைச்சர் விடுவிப்பு

sau

Contributors
author image

BBC

கடந்த நவம்பர் மாதம் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் ஒருவரான சௌதி அமைச்சர் ஒருவர் மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் நிதி அமைச்சர் இப்ராகிம் அல்-அசஃப், பிற அமைச்சர்களுடன் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட காட்சிகளை அந்நாட்டு அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

சௌதியின் 32 வயதாகும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் செயல்படுகின்ற ஊழக்கு எதிரான அமைப்பு, 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜன் கணக்கான முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய நவம்பர் மாதம் கைது செய்து  சிறை வைக்கப்பட்டனர்.

இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஆகியோரின் கைது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடக்கமே என்று, அந்நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் அப்போது தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அசஃப் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by The Design Lanka