சவுதி அரச குடும்ப வாரிசுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - அல்லாஹ்வின் சட்டமே உயர்வானது » Sri Lanka Muslim

சவுதி அரச குடும்ப வாரிசுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – அல்லாஹ்வின் சட்டமே உயர்வானது

Saudi Crown Prince Salman bin Abdulaziz Al Saud

Contributors
author image

Editorial Team

சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரச குடும்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊத் க்கும் அவரது நண்பர் ஆதில் முஹைமித் என்பவருக்கும் இடையே உருவான பிரச்சனையின் போது துருக்கி பின் சஊத் அவர்களால் ஆதில் முஹைமித் கொலை செய்யபட்டார்

கொலை செய்யபட்டவரின் வாரிசுகள் விட்டு கொடுத்தலே தவிர கொலைக்கு கொலை தான் தண்டனை என்பது இஸ்லாமிய சட்டமாகும்

மேற்கூறபட்ட வழக்கில் கொலையாளி சவுதி அரச குடும்த்தை சார்ந்தவர்

அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயர்ச்சிகள் மேற்கொள்ள பட்டது

ஆனால் சவுதி மன்னர் சல்மான் இந்த பிரச்சனையில் மார்க்க சட்டம் என்ன சொல்கிறதோ அதை நிலை நிறுத்துவதில் உறுதியாக இருந்தார்

மார்க்க சட்டங்களை நிலை நாட்டுவதில் எழியவன் வலியவன் அரசன் ஆண்டி என்ற வேற்றுமைகள் இருப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி பட தெரிவித்து விட்டார்

குற்றம் செய்தவன் அரச குடும்பத்தை சார்ந்தவனாக இருந்தாலும் இறைவனின் ஆணைபடி உள்ள தண்டனையை அவன் அனுபவித்தே ஆக வேண்டும் எனவும் கூறிவிட்டார்

இதனை தொடர்ந்து சவுதி அரச குடம்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊத் என்ற அமீருக்கு நேற்று -18 மரண தண்டனை ரியாத்தில் நிறைவேற்ற பட்டது

கொலைக்கு கொலை என்ற இறை சட்டம் சவுதி அரசகுடும்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊத் க்கு இன்று நிலை நிறுத்த பட்டது

Web Design by The Design Lanka