சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில் இலங்கையர்களின் சடலங்கள் » Sri Lanka Muslim

சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில் இலங்கையர்களின் சடலங்கள்

salarge

Contributors

சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படாத மேலும் 20 சடலங்கள் காணப்படுவதாக, ARAB NEWS இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப் பகுதிக்குள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 30 வயதிற்குக் குறைவான 75 வீத பெண்களின் சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

குறித்த காலப் பகுதிக்குள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக சென்று உயிரிழந்த இலங்கைப் பெண்கள் குறித்து, அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை வர்த்தக சங்கம் அதிகக் கவனம் செலுத்தியுள்ளது.

 

இந்த உயிரிழப்புக்களில் அதிகளவானவை மாரடைப்பினால் ஏற்பட்ட மரணம் என கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்திய அதிகாரியை மேற்கோள்காட்டி அரப் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

அத்துடன், அவ்வாறு அனுப்பி வைக்கப்படுகின்ற சடலங்களில் பெரும்பாலானவற்றில் உள்ளக அவயங்கள் காணாமற் போயுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

நாளொன்றுக்கு நாட்டிற்கு வெளியே வாழ்ந்து வருகின்ற ஒரு இலங்கையர் வீதம் உயிரிழப்பதாக ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டிஅரப் நியூஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

 

உயிரிழக்கும் இருவரின் சடலங்களை உறவினர்களுக்கு வழங்குவதற்காக, நாளாந்தம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.(nf)

Web Design by The Design Lanka