சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் - திசை திருப்பப்பட்ட தரையிறங்க வேண்டிய விமானங்கள் - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் – திசை திருப்பப்பட்ட தரையிறங்க வேண்டிய விமானங்கள்

Contributors

சவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் மீது யேமனின் ஹவுத்தி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து இது தொடர்பில் உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இத்தாக்குதலில் அராம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதி அராம்கோ, அதன் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிலையங்கள் பெரும்பாலும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தின் ஜெட்டாவிலிருந்து நாடு முழுவதும் 1,000 கிலோமீட்டர் (620 மைல்) தொலைவில் உள்ளன.

ஆறு ஆண்டுகளாக ஈரானுடன் இணைந்த ஹவுத்தி இயக்கத்துடன் போராடி வரும் சவுதி தலைமையிலான இராணுவ கூட்டணியின் செய்தித் தொடர்பாளருக்கு ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை மேற்கொண்ட அழைப்புக்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லை.

ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா ஒரு ட்விட்டர் பதிவில், வியாழக்கிழமை அதிகாலை ஒரு ஏவுகணையைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்தது என்றும், அதன் இலக்கை விரிவாக தாக்கியதாகவும் கூறினார்.

தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் ஜெட்டா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் நாட்டில் உள்ள மற்றைய விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், தற்போது வரை சவுதி தரப்பில் இருந்து இந்த தாக்குதல் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கு யேமனைக் கட்டுப்படுத்தும் இந்த இயக்கம் கடந்த காலங்களில் சவுதி எரிசக்தி சொத்துக்களைத் தாக்கியுள்ளது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தை தலைநகர் சனாவில் அதிகாரத்திலிருந்து ஹவுத்திகள் வெளியேற்றிய பின்னர் 2015 மார்ச் மாதம் யேமனில் கூட்டணி தலையிட்டது.

யேமனின் எரிவாயு நிறைந்த மரிப் பிராந்தியத்திலும் மோதல் தீவிரமடைந்துள்ளதால் அமெரிக்காவும் ஐக்கிய நாடுகளும் சமாதான முயற்சிகளை புதுப்பித்துள்ளன.

இதனிடையே அமெரிக்க கருவூலத் துறை செவ்வாயன்று இரண்டு ஹவுத்தி இராணுவத் தலைவர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது.

சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பினாமி யுத்தமாக இந்த மோதல் இப்பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team