சவூதியிலிருந்து 1500 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை! - Sri Lanka Muslim

சவூதியிலிருந்து 1500 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

Contributors

பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்த நிலையில் சவூதி அறேபியாவில் சட்ட விரோதமாகத்  தங்கியிருக்கும் இலங்கைப்  பணியாளர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப்  பணியகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில்  சவூதி அறேபியாவில் தங்கியிருக்கும்      வெளிநாட்டுப் பணியாளர்கள்      அந்நாட்டைவிட்டு    வெளியேறுவதற்கு   கடந்த 3ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் காலப்பகுதிக்குள் சவூதியை விட்டு வெளியேறாது தொடர்ந்தும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களைக்  கைது செய்து சிறைத் தண்டனை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பொது மன்னிப்புக் காலப்பகுதிக்குள் 1500 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புப்  பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் சவூதி அறேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் கீழ் தங்கியிருப்பதாகவும் அவர்களை மீண்டும் இலங்கை அழைத்துவர , தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப்  பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team