சவூதியில் மரணமான சித்தி ரசீதாவின் உறவினர்கள் யார்? விபரங்களை கோருகிறது - Sri Lanka Muslim

சவூதியில் மரணமான சித்தி ரசீதாவின் உறவினர்கள் யார்? விபரங்களை கோருகிறது

Contributors

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் திருமதி சித்தி ரசீதா என்ற இலங்கைப் பெண் மரணமாகியுள்ளார். இவர் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் ஜித்தாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு வெளிநாட்டு அமைச்சின் ஊடாக அவரது உறவினர்களின் விபரங்களை அறிவதற்காக உதவியை நாடியுள்ளது.

மரணமான திருமதி சித்தி ரசீதா உம்மாவின் கடவுச் சீட்டு இலக்கம்  N 1336656 என்பதை மட்டுமே ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் பிரிவு அறிவித்துள்ளது.

திருமதி சித்தி ரசீதா உம்மா தொடர்பாக விபரங்கள் தெரிந்திருப்பின் அவரது உறவினர்களோ, அல்லது அயலவரோ அல்லது அவர் பற்றிய விபரங்களை அறிந்தவர் எவராயினும் உடனடியாக வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

விபரங்கள் தெரிந்தவர்கள் வெளிவிவகார கொன்சியூலர் பிரிவுக்கு நேரடியாக வந்தோ, அல்லது 011-2437635 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team