சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 தொன்  பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 தொன்  பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு

Contributors

50 தொன் எடைகொண்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு, சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்த அன்பளிப்பு சவூதி அரேபிய மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (16.03.2023) கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி குறித்த பேரீச்சம்பழ தொகையை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.

இலங்கையின் சார்பில் புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அதனைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

சவூதி அரேபிய அரசாங்கம் வருடாந்தம் ரமழான் காலத்தை முன்னிட்டு பெருந்தொகை பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team