சவூதி அரேபியாவின் நீதித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய விஜயதாச ராஜபக்ஷ..! - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவின் நீதித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய விஜயதாச ராஜபக்ஷ..!

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரசாங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதும், எவ்வித கொடுப்பனவுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் விஜேய தாச ராஜபக்ஷ சவூதியின் நீதித்துறை அமைச்சர் ஷேக் முகமதுபின் அப்துல் கரீம் அல்-இசாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

2021 ஜனவரி 12 திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலாளரிடமிருந்து இது தொடர்பில் விசாரணை செய்ததாக தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ச, சவுதி அரேபியா ஒரு டொலரைக் கூட வழங்கவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்தபோது நெலும் பொகுன மண்டபத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் முன்னிலையில் சவூதி அரேபியாவின் நன்கொடை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனினும் அந்த நிதித்தொகையில் ஒரு டொலரேனும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் விஜயதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team