சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவின் மறைவுக்கு அமைச்சர் எம். எச். அப்துல் ஹலீம் அனுதாபம் » Sri Lanka Muslim

சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவின் மறைவுக்கு  அமைச்சர் எம். எச். அப்துல் ஹலீம் அனுதாபம்

haleem2

Contributors
author image

இக்பால் அலி

 

உலக முஸ்லிம்களுக்கு சேவையாற்றி சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் மரணம் குறித்து இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களும் ஆழ்ந்த கலையடைந்துள்ளதாகவும் அதேவேளை அன்னாரது சுவன வாழ்வுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் சமய கலாசார, தபால் துறை அமைச்சர் எம். எச். அப்துல் ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இன்று மன்னரின் மறைவையொட்டி கொழும்பு சவுதி அரேபிய தூதுராலயத்திற்கு விஜயம் செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் செய்திப பதிவேட்டில் அமைச்சர் கையொப்பிட்டமிட்டார் அதனைத் தொடர்ந்து அமைச்சர் அங்கு மேலும் தம் கருத்தினை இவ்வாறு தெரிவித்தார்.

 

அப்துல்லா மன்னர் சவூதி அரேபியான் ஆறாவது மன்னராவர் அன்னாரது பணிகள் சவூதி அராபியாநாட்டு மக்களுக்கு மாத்திரமல்ல முழு உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமாகச் சென்றடைந்துள்ளது. மன்னரது மரணம் ஈடு செய்யமுடியாததொன்றாகும்.

 

துயரத்தில் ஆழ்ந்துள்ள அந்நாட்டு மக்களுக்கும் அன்னாரது குடும்பத்திற்கும் எமது நாட்டு மக்கள் சார்பாக கவலையைத் தெரிவித்துக் கொள்வதற்காகவும் மற்றும் விசேடமாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, பிரதமர் ரனில் விக்கரமசிங்கவின் அனுதாபத்தைத் தெரிவிப்பதற்காகவும் நான் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ஏ. எச.;. எம். பௌசி ஆகியோர் இன்று சவூதி நாட்டுக்குச் செல்லவுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka