சவூதி அரேபியாவில் பணிபுரிக்கின்ற தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவில்லை - கணவன் தற்கொலை முயற்சி - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் பணிபுரிக்கின்ற தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவில்லை – கணவன் தற்கொலை முயற்சி

Contributors

வெளிநாட்டில்  பணிபுரிக்கின்ற  தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவில்லையெனக்கூறி  அவரது கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று பத்தரமுல்லையில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாகவே அவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையிலிருந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் புளியங்குளத்தைச்சேர்ந்த 38 வயதான நான்கு குழந்தைகளின் தந்தையான இந்திக பிரசாத் என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய மனைவி சவூதி அரேபியாவில் தொழில்புரிவதாகவும் அங்கு அவர் பல்வேறு இடையூறுகளுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவரை உடனடியாக நாட்டுக்கு திரும்பி அழைத்துவருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் அவர் கோரியுள்ளார்.
அவரை நாட்டுக்கு திருப்பி அழைப்பதாயின் மூன்றரை இலட்சம் ரூபா தேவையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்ததையடுத்தே அவர் தனது நான்கு குழந்தைகளுடன் பணிகத்திற்கு இன்று வருகைதந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team