சவூதி அரேபியாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..!

Contributors

சவூதி அரேபியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சவூதியில் மார்ஸ் என்னும் காய்ச்சல் பரவி வருவதாகவும் இது குறித்து இலங்கையர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிற்கு பயணங்களை மேற்கொள்ளும் சகல இலங்கையர்களுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ஸ் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகம், நீரிழிவு, சுவாசப்பை, இருதய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் சவூதி அரேபியாவிற்கான விஜயங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கை கால்களை சுத்தமாக கழுவி, உணவு உட்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார வழிமுறைளை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சல், இருமல் போன்ற நோய்க் குறிகள் ஏற்பட்டால் உரிய முறையில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது

(ARAB NEWS)

A Jubail citizen who had been infected with the coronavirus died two days ago in one of the city’s hospitals, bringing the death toll from the virus to 52.

Middle East Respiratory Syndrome (MERS) is a viral respiratory illness caused by a coronavirus called MERS-CoV.
The virus first appeared in Jubail last week when the 121st case in the Kingdom was reported. The Ministry of Health said in a recent statement that the 54-year-old citizen came from the Riyadh province. He had not traveled outside the Eastern and Riyadh Provinces prior to contracting the virus.

The victim had suffered several chronic diseases and was admitted to the hospital’s primary care.
This is the first case to be recorded in Jubail since the outbreak of the virus, a source at the Health Ministry confirmed.

Web Design by Srilanka Muslims Web Team