சவூதி அரேபிய குழுவினரின் நிதியுதவியில் 3 கிராமங்களில் அபிவிருத்தி ஆரம்பம் - Sri Lanka Muslim

சவூதி அரேபிய குழுவினரின் நிதியுதவியில் 3 கிராமங்களில் அபிவிருத்தி ஆரம்பம்

Contributors

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறிய கிராமங்களான  ஒள்ளிக்குளம் ,மண்முனை,ஏறாவூர் மஜீட் ஆகிய கிராமங்களில்சவூதி அரேபிய குழுவினரின்

நிதியுதவியுடன் நேற்று  செவ்வாய்க்கிழமை வீட்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மூன்று கிராமங்களிலும் வெவ்வேறு நிகழ்வாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் திட்ட நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பபட்டதுடன் வீட்டு திட்டத்திற்தகான அடிக்கல்லும் நடப்பட்டுள்ளது.
ஏறாவூர் மஜீட் கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சவூதி அரேபிய மதீனமா நகரத்தைச் சேர்ந்த முஹம்மத் காலித் அல் கையூம், அஷ்ஷேய்க் மும்தாஸ் (மதனி) ,ஏறாவூர் ஸைனப் மஸ்ஜித் பள்ளிவாயல் நிர்வாகிகள் ,அப்துல் மஜீத் ஹாஜியார் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சவூதி அரேபிய பிரமுகர்களினால் ஏறாவூர் ஸைனப் பள்ளிவாயலில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித்தின் மரணித்த தாய் தந்தையர்களின் நினைவாக இவ் வீட்டு திட்டம் அமைக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வின் முதற்கட்டமாக வறிய குடும்பங்கள் இனம்கானப்பட்டு அவர்களின் வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் மற்றைய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team