சவூதி அரேபிய மன்னருக்கு, இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நன்றி தெரிவிப்பு (படங்கள்) - Sri Lanka Muslim

சவூதி அரேபிய மன்னருக்கு, இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நன்றி தெரிவிப்பு (படங்கள்)

Contributors

(மக்காவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இம்முறை புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரேபிய மன்னரின் அழைப்பின் பேரில் இலங்கையிலிருந்து 50 ஹாஜிகள் மக்காவை அடைந்துள்ளனர்.

வருடந்தோரும் சவூதி அரசாங்கம் உலக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இந்த கடமையினை நிறைவேற்றும் வகையில் சந்தர்ப்பந்தங்களை ஏற்பாடு செய்து கொடுத்துவருகின்றது.

இம்முறை 35 நாடுகளைச் சேர்ந்த 1600 பேர்கள் மன்னரின் அழைப்பின் பேரில் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றவருகைத்  தந்துள்ள நிலையில் இவர்களின் நலன் குறித்து கண்டறியும் வகையில் சவூதி நாட்டின் மத விவகார மற்றும் ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் அஷ்ஷேய்க் சாலிஹ் பின் அப்துல் அஸீஸ் ஆல ஷேஹ் இன்று ஹாஜிகள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வருகைத்தந்தார்.

மன்னரின் அழைப்பின் பேரில் வருகைத்தந்துள்ள  இலங்கை ஹாஜிகள் குழுவுக்கு பொறுப்பாக வருகைத்தந்துள்ள அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் உதவி பொதுச் செயலாளரும்,ஜமிய்யத்துஸ் ஷபாப் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளருமான மௌலவி எம்.எஸ்.எம்,தாஸீம் சவூதி மத விவகார மற்றும் ஹஜ் தொடர்பான அமைச்சருடன் கலந்துரயாடல்களை நடத்தினார்.

அதன் போது அவரிடம் கருத்துரைத்த மௌலவி தாஸிம்,

இம்முறை இலஙகை நாட்டிலிருந்து மன்னரின் விருந்தாளிகளாக ஹஜ் கடமையினை நிறைவேற்ற 50 பேருக்கு சந்தர்ப்பம் கிடைத்தமையிட்டு நாம் மகிழ்ச்சி அடைவதாகவும்,முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதுடன் அடுத்து சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும் அமைச்சர்களுக்கும்,ஏற்பாட்டாளர்களுக்கும்,இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும், அனைத்து முஸ்லிம்களின் சார்பிலும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறியதுடன், குறிப்பாக இம்முறை விமான நிலையம் மற்றும் தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும்,மேலும் இஸ்லாமிய உம்மத் இக்காலத்தில் சிறந்த முறையில் வாழ பிரார்த்திப்பதகாவும்,குறிப்பாக இலங்கையில் அமைந்துள்ள சவூதி துாதரகத்தின் துாதுவர் அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல்-ஜம்மாஸ் ஆகியோருக்கும்சகலரின் சார்பில்  நன்றிகளை  தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team