சவூதி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தால் அமைதிக்குலைவு - Sri Lanka Muslim

சவூதி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தால் அமைதிக்குலைவு

Contributors

சவூதிதலைநகர் ரியாத்தில், சரியான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்கள் புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சூடான் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்ட பகுதியில், சௌதி காவல்துறையினர் ரோந்துப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

துறைமுக நகரான ஜெட்டாவில், பெரும்பாலும் எத்தியோப்பியர்கள் அடங்கிய ஒரு குடியேறிகள் கூட்டம் ஒன்று பிரதான சாலையை மறிக்க முயன்றபோது, அந்தக் கூட்டத்தினரை காவல்துறையினர் கலைத்தனர்.

கடந்த ஏழு மாதங்களில், நாட்டில் தங்கள் இருப்பை சட்டரீதியாக முறைப்படுத்திக்கொள்ளாமல் இருக்கும், வெளிநாட்டவர்களைப் பிடிக்க சவூதி ஆட்சியாளர்கள் முயற்சிகளைத் தொடர்கையில், இந்த அமைதிக்குலைவு வருகின்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 23,000 எதியோப்பியர்கள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். மேலும் பல வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில் காத்திருக்கிறார்கள்.bbc

Web Design by Srilanka Muslims Web Team