சஹ்ரானின் மனைவியின் உயிருக்கு ஆபத்து என தகவல்கள் ...! » Sri Lanka Muslim

சஹ்ரானின் மனைவியின் உயிருக்கு ஆபத்து என தகவல்கள் …!

Contributors
author image

Editorial Team

மனித உரிமை ஆணைக்குழு சிறைச்சாலை நிர்வாகத்திற்கு கடிதம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கான பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறைச்சாலை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்கவேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தவேளை சஹ்ரான் ஹாசிமின் மனைவி தெரிவித்த சில தகவல்களை தொடர்ந்து அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சஹ்ரான் ஹாசிமின் மனைவி திடீர் என கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வெலிக்டை சிறைச்சாலையிலிருந்து வெலிகந்தை சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை இந்த அச்சத்தினை மேலும் அதிகரித்துள்ளது என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்திற்கு ஏற்ப கைதிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு சஹ்ரான் ஹாசிமின் மனைவி குறித்த முறைப்பாடு குறித்து கவனத்தை ஈர்த்துள்ளதுடன் அவர் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் உள்ளதால் அவரின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team