சஹ்ரானுடன் தொர்பில் இருந்த ஒலுவிலைச் சேர்ந்த திருமணப் பதிவாளர் கைது..! - Sri Lanka Muslim

சஹ்ரானுடன் தொர்பில் இருந்த ஒலுவிலைச் சேர்ந்த திருமணப் பதிவாளர் கைது..!

Contributors

சஹ்ரான் ஹசீமிற்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் அம்பாறை ஒலுவில் திருமண பதிவாளரான 55 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) அதிகாலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் திருமண பதிவாளரான 55 வயதுடைய சுபைதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதிவாளர் வீட்டில் கடந்த 2017 ஆம் தொடக்கம் ஆண்டு 2018 ஆம் ஆண்டு வரையில் சஹ்ரான் தங்கி சென்றுள்ளதாகவும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டிலே கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Web Design by Srilanka Muslims Web Team