சாயம்போகும் வாலிபம் » Sri Lanka Muslim

சாயம்போகும் வாலிபம்

worker1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபு உமைர் ஆல் சூரி


மனசெல்லாம் உனை நிரப்பி
கண்களிலே உன் முகம் கொழுவி
நெஞ்சினிலே உனை சாய்த்து
இப்பாலையிலே வாடுகிறேன்
நீரற்ற வாய்க்காலைப் போல

உன் சமயல் மந்திரத்தில்
மயங்கிய நாட்களை மீட்டுகிறேன்
சாதத்தை விரும்பாமலேயே
மெல்லும் கவளங்களுக்கிடையில்

வேலைச் சுமையில் உன்
தொலைபேசி அழைப்புக்கு
பதில் கொடுக்காத நாட்களில்
குற்ற உணர்வால் தணல்நடுவில் புழுவாய்
வெந்து துடிப்பதை நீ அறியாமல்
அநியாயக்காரணாய் பார்க்கிறாய் என்னை

நீ நினைப்பதைப்போல்
சுகங்களில் நீராடவில்லை நான்
கண்நீர் மழையில் ஜலதோசம்
பிடிக்கும் போதெல்லாம் உன்னோடு
பேசி தலையை துவட்ட
நினைக்கும் சமயத்திலே
முடியாமல் போகும் போது
நம்மூர் பனிரெண்டு மணி
சூரியனாய் சுடுகிறது என் மனசு

வலுவிழந்து போகும் என் உடல் உளத்தை
நான் உன்னிடம் சொல்லுவதில்லை
உன் மனசு வலிக்குமென்றெண்ணி
அல்லும் பகலும் அழுது
அக்கிக்கினிக்குள் அமிழ்ந்து போகும்
என் வாலிப வர்ணங்கள்
மீண்டுவராமலேயே நீர்க்குமிழியாய்
கரைகிறதே…!!!

Web Design by The Design Lanka