சாய்ந்தமருதில் இடம்பெற்ற தேர்தல் மேடையில் விம்மி கண்ணீர் விட்ட பிரதி அமைச்சர் » Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தேர்தல் மேடையில் விம்மி கண்ணீர் விட்ட பிரதி அமைச்சர்

Makkalviruppam159

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஏ.எல்.ஜுனைதீன்


தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில்  பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் உரை நிகழ்த்துகையில் ஒரு கட்டத்தில் விம்மல் நிலை அடைந்ததுடன் கண்ணீர் சிந்தியதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

சாய்ந்தமருதில் 3 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்குபற்றுதலுடன்  இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையிலேயே பிரதி அமைச்சர் ஹரிஸ் இவ்வாறு கவலை அடைந்து கண்ணீர் சிந்தினார்.

சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் படும் அவஸ்த்தையை எடுத்துப் பேசிக்கொண்டிருந்த போதே பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் கவலை மிகுதியால் விம்மியபடி இப்படி கண்ணீர் சிந்தினார்.

அவரால் அந்தக் கட்டத்தில் பேசமுடியாத நிலை ஏற்பட்டு சற்று நேரம் தாமதமாகி மீண்டும் பேச ஆரம்பித்தார்.
 
மாண்புறும் சாய்ந்தமருது என்ற பெயரிட்டு எழுச்சி மாநாடு என்ற தொனியில் இக்கூட்டம் சாய்ந்தமருதில் பாதுகாப்புக்கு மத்தியில் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka