சாய்ந்தமருதில் சமுர்த்தி வீடுகள் கையளிக்கும் நிகழ்வு..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் சமுர்த்தி வீடுகள் கையளிக்கும் நிகழ்வு..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ள சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கியா சமுர்த்தி விசேட வீடு கையளிக்கும் நிகழ்வு சார்ந்த மருது – 01ம் பிரிவில் இடம்பெற்றது.

சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டினை திறந்து வைத்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினதும் , பிரதேச தனவந்தர்களினதும் பத்து லட்சம் ரூபா நிதியினைக் கொண்டு இவ்வீடு நிர்மாணித்து கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு , உதவி திட்டமிடல் பணிப்பளர் கே.எல்.ஏ.ஹமீட் , சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.றிபாயா , ஏ.எம்.ஏ.கபூர் , சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம். காலிதீன், எம் எம்.றஸானா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சமுர்த்தி வீட்டு லொத்தர் மூலம் சாய்ந்தமருது – O8ம் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றும் கையளித்து வைக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team