சாய்ந்தமருதில் மட்டுமல்லாது கல்முனை மாநகரத்திலும் எங்களுடைய பலத்தினை நிரூபிப்போம் - எஹிய்யா கான் » Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் மட்டுமல்லாது கல்முனை மாநகரத்திலும் எங்களுடைய பலத்தினை நிரூபிப்போம் – எஹிய்யா கான்

0

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(VIDEO)

முஸ்லிம் காங்கிரசினை சாய்ந்தமருதில் இருந்து ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காக புதிதாக எமது கட்சிக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் கட்சியானது சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை கோரிக்கையினை முன்வைத்து சுயேற்சையாக பள்ளிவாயல் நிருவாகம் சார்ந்தவர்களை களமிறக்கியுளார்கள் என்ற போர்வையில் பள்ளிவாயல் நிருவாகத்தினை வீதிக்கு கொண்டு வந்து தமது அரசியல் நாடகத்தினை அரங்கேற்றியுள்ளது. இதற்கான பிரதி பலனை வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவில் முஸ்லிம் காங்கிரசினுடைய சத்தி சாய்ந்தமருதில் மட்டுமல்லாது கல்முனை மாநகரத்தில் எவ்வாறு இருக்க போகின்றது என்பதனை நிரூபிக்கும் என அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரசின் பொருளாளரும், உயர் பீட உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சாய்ந்தமருது 18ம் வட்டாரத்தில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளருமான எஹிய்யா கான் தெரிவிக்கின்றார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த உயர் பீட உறுப்பினர் எஹிய்யா கான்.. இவ்வாறு திரைக்கு பின்னால் முஸ்லிம் காங்கிரசினை ஒழித்து கட்ட வேண்டும் என செயற்பாடும் எமது மாற்று கட்சியின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நான் களமிறங்கியுள்ளேன். அல்லாஹ்வின் உதவியால் சாய்ந்தமருது 18ம் வட்டாரத்தில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதோடு அம்பாறை மாவட்டத்திலிருந்தோ அல்லது கல்முனை மாநகர எல்லைக்குள் இருந்தோ முஸ்லிம் காங்கிரசினை எவராலும் அழித்து விட முடியாது என்பதனை நிருபித்து காட்டுவதற்காகவுமே முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறங்கியுள்ளேன். அந்த அடிப்படையில் நான் பிறந்து வளர்ந்த எனது 18ம் வட்டார பிரதேசத்தில் எனது கட்சிக்காகவும், எமது மக்களின் நலத்திற்காகவும் கடந்த ஆறு வருட காலமாக சொந்த இடத்தில் வீடு கட்டி எனது அரசியல் முன்னெடுப்புக்களை செய்து வருகின்றேன்.

எனது பிரதேசத்தில் இருக்கின்ற மக்களை ஓவ்வொருவராக சந்தித்து பிரச்சனைகளை கலந்தாலோசித்து, அவர்களுக்கு அதனை தெளிவுபடுத்தி வருகின்றமை மக்களுக்கும், தாய்மார்களுக்கும் தெரிந்த விடயமாக உள்ளது. ஆகவே நான் போட்டியிடுகின்ற வட்டாரத்தில் வாழுகின்ற தாய்மார்கள், தகப்பன்மார்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் நிச்சயமாக என்னை வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

ஆனால் மறுபக்கத்தில் எரிச்சல், பொறாமை கொண்ட ஒரு சில என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஒரு சில தனிப்பட்ட அஜந்தாக்களுக்கு நான் இடமளிக்கவில்லை என என்னால் வீசப்பட்ட சிலர் என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எமது மாற்று கட்சியுடன் சேர்ந்து திரை மறைவில் செயற்படுவதாக அறியக் கிடைக்கின்றது. அது எனது வெற்றியையோ அல்லது எமது கட்சியின் செல்வாக்கினையோ எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை என்ற அல்லாஹ் மீது வைத்துள்ள நம்பிக்கையுடனே தேர்தலில் நான் குதித்துள்ளேன்.

அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் சாய்ந்தமருதிற்கு ஒரு தனியான பிரதேச சபை தேவை என்பதனை ஒரு சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட அது நியாயம் என்றுதான் கூறும் அந்த அளவிற்கு சாய்ந்த மருதிற்கான தனியான பிரதேச சபையின் தேவைப்பாடு இருக்கின்றது. ஆகவே குறித்த பள்ளிவாயலின் தீர்மானத்திற்கு மாற்றமாக நின்று என்னால் செயற்பட 010..00000000மு0000ல்ல்டியாது. ஆனால் இந்த விடயம் சம்பந்தமாக தெளிவாக நான் கூறும் விடயம் என்ன வென்றால்.? எமது நாட்டினை ஆளுகின்ற உயர்மட்ட அரசியல்வாதிகள் அனைவரையும் குறித்த தனியான பிரதேச சபை சம்பந்தமாக பள்ளிவயால் நிருவாக சந்திருந்தார்கள்.

ஆனால் நடந்தேறியது எதுவும் இல்லை. நாற்பது தடவைகளுக்கு மேல் முஸ்லிம் காங்கிரசின் தலைமையை சந்தித்தும் எதுவும் நடக்கவில்லை என இபோழுது கூறுகின்றார்கள். மறு பக்கத்திலே அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சியின் தலைமையினால் நேரடியாக பதவி வழங்கப்பட்டு முக்கிய உறுப்பினராக முஸ்லிம் காங்கிரசினை நான் பிரதி நிதித்துவப்படுத்தி இருந்தும் முஸ்லிம் காங்கிரசின் தலைமையுடன் குறித்த விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகம் ஒரு தடவையேனும் என்னை அழைக்கவில்லை. ஆகவே பள்ளிவாயல் நிருவாகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி யார் முஸ்லிம் காங்கிரசின் தலைமையுடம் கலந்துரையாடினார்கள் என்பதும் எனக்கு தெரியாது.

பள்ளிவாயல் மறைக்கார் சபையானது குறித்த விடயம் சம்பந்தமாக இந்த நாட்டில் உள்ள அதி உயர் அரசியல்வாதிகளை சந்தித்தும் எதுவும் நடந்ததாகவும் இல்லை. சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுப்பதென்றால் அது முஸ்லிம் காங்கிரசினால் மட்டுமே முடியும் என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அந்த உண்மையானது தெட்டத்தெளிவாக மக்களுக்கும் மட்டுமல்லாமல் பள்ளிவாயல் மறைக்கார் சபையினருக்கும் விளங்கியுள்ளது. பிரதேச சபையினை கொடுப்பது அல்லது கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து எங்களிடம் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் பிரதேச சபையினை பெற்றுக்கொடுப்பது எங்களால்தான் முடியும் என்பதுடன் அதனை எங்களது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாகத்தான் செயற்படுத்த முடியும் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அது மட்டுமல்லாமல் எங்களது சாய்ந்தமருதில் வெடித்துள்ள போரட்டமானது ரவூப் ஹக்கீமையும், கட்சியையும் அழிக்க வேண்டும் என்ற போராட்டமாகவே இருக்கின்றது. அதே போராட்டத்தினை செய்பவர்கள் தற்பொழுது ரவூப் ஹக்கீம் தமிழ் டயஸ்போராக்களின் பணத்திற்கும் சோரம் போய் விட்டார் என்ற பாரிய குண்டினை தூக்கி போட்டு தாங்கள் நினைத்ததை சாதித்து கொள்ளலாம் என முகநூல்களில் ஆயிரம் கல்ல ஐடிகளை திறந்து  பகற்கனவு கானுகின்றனர்.

 ரவூப் ஹக்கீம் என்பவர் யார்.? அவருடைய திறமை மற்றும் இராஜ தந்திர முன்னெடுப்புக்கள் என்ன என்பது பற்றி இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் முஸ்லிம்களின் தலைவன் என்பதும்  நன்றாக தெரிந்த விடயமாகவே இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கையும் கிழக்கையும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், சுமந்திரனுடனும் சேர்ந்து ரவூப் ஹக்கீம் இணைத்து கொடுக்க போகின்றார் என்பது இப்பொழுது அவர்களுடைய நவீன ஆயுதமாக முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக பாவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சில்லறை விளையாட்டுக்களை எல்லாம் எமது தலைமையும் கட்சியும் எவ்வாறு முகக்த்திற்கு நேரே நின்று முறியடித்து கிழக்கு மக்களை மரத்தின் நிழலின் கீழ் எவ்வாறு வாழ வைக்க முடியும் என்பதற்கு அப்பால் எமது கட்சியின் தலைமையின் வழி காட்டலின் கீழ் அதனை நாங்கள் நிறைவேற்றி கட்டுவோம் என்பதை வருகின்ற தேர்தல்களில் கண்டுகொள்வார்கள் என தனது கருத்தினை மேலும் தெரிவித்தார் உயர் பீட உறுப்பினர் எஹிய்யா கான்.

அத்தோடு சாய்ந்தமருதில் இடம் பெற்ற பிரச்சனை, வீடுடைப்பு, சுயற்சையாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமை, டயஸ் போராக்களுக்கும் முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையிலான தொடர்பு, வடக்கு கிழக்கை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இணைப்பது, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசிற்கு ஏற்படுள்ளதாக கூறப்படும் சரிவு நிலை சம்பந்தமாக உங்களுடைய கருத்து, கல்முனை ஜவாத்தினுடை கட்சி மாற்றம், போன்ற முக்கிய கேள்விகளுக்கு உயர் பீட உறுப்பினர் எஹிய்ய கான் கூறுகின்ற பதில்களின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka