சாய்ந்தமருதில் ஹரீஸ் எம்.பியின் 'அபிவிருத்திச் சாதனை' - Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் ஹரீஸ் எம்.பியின் ‘அபிவிருத்திச் சாதனை’

Contributors
author image

ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது பிரதான வீதியினை அழகுபடுத்தும் நவீன மின்னொளி அபிவிருத்தித் திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் முடிவடைந்து ‘அபிவிருத்தியில் சாதனை படைத்துள்ளது.’

 

பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் இவ்வேலைத்திட்டம் கடந்த 28.08.2014ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டு நேற்று முந்தினம் 01.09.2014ம் திகதி திங்கட்கிழமை ஐந்து நாட்களுக்குள் முடிவடைந்துள்ளது.

 

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரவு பகலாக வேலைகள் இடம்பெற்றன.

 

இவ்வேலைத்திட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஷரீப் ஹக்கீம், மெஸ்றோ நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக இணைப்பாளருமான நௌபர் ஏ.பாவா ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் மேற்பார்வை செய்யப்பட்டது.

 

நவீன மின்னொளித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு குறைந்த ஐந்து நாள் காலப்பகுதிற்குள் முடிவடைந்துள்ளமையினால் இதனை ஒரு  சாதனையாக பிரதேச மக்கள் பார்க்கின்றனர். இத்திட்டத்தினால் சாய்ந்தமருது பஷார் மின்னொளியால் பிரகாசிப்பதுடன் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டு குறைந்த காலப்பகுதிற்குள் முடிவடைந்தமை அம்பாறை மாவட்டத்தில் இதுவே முதற்தடவையாகும் என்பது குறிபிடத்தக்கது.

 

சாய்ந்தமருது பிரதான வீதியினை அழகுபடுத்தும் நவீன மின்னொளி அபிவிருத்தித் திட்டத்தினை குறுகிய காலப்பகுதிற்குள் முடித்துத் தந்தமையையிட்டு பிரதேச வர்த்தகர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸூக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team