சாய்ந்தமருது அல்ஹிலாலில் ஏடு துவக்க நிகழ்வு » Sri Lanka Muslim

சாய்ந்தமருது அல்ஹிலாலில் ஏடு துவக்க நிகழ்வு

ya66

Contributors
author image

M.Y.அமீர்

நாடுமுழுவதும் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை பாடசாலையோடு இணைக்கும் வித்தியாரம்ப விழா 2017-01-11 திகதி இடம்பெற்றது.

இந்தவகையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்தில் புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான யஹ்யாகான் ஏடு துவக்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய யஹ்யாகான்,

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் முதலாம் தரத்துக்கு ஒரே தடவையில் 270 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதனையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது என்பது முடியாத காரியமாக இருந்தாலும் அதனை இந்தப் பாடசாலையின் அதிபர் செய்துள்ளமையையிட்டு அவரைப் பாராட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான யஹ்யாகான் தெரிவித்தார்.

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் முதலாம் தரத்துக்கு 270 பிள்ளைகளைச் இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அவர் பணப் பரிசுகளை வழங்கி வைத்து அவர் மேலும் உரையாற்றுகையிலேயே, ஏனைய பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு பிள்ளகைளை அனுமதிப்பதில் காணப்படும் குறைபாடுகளையிட்டு நான் கவலையடைகிறேன். இந்த நிலையில் அல்ஹிலால் பாடசாலை ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதே பிரதேசத்தில் நான் கல்வி கற்ற பாடசாலையான அல் கமரூன் பாடசாலையில் இம்முறை 25 மாணவர்கள் மட்டுமெ முதலாம் தரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளளனர். இந்த பாடசாலை வளர்ச்சிக்காக பெற்றோர்கள் தங்களது கைகளை உயர்த்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்திலேயே அல்ஹிலால் போன்று அந்தப் பாடசாலையும் வளர்ச்சியடையும்.

பாடசாலைகளின் கல்வி வளர்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என்பதனையும் இங்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் பிரதியமைச்சர் ஹரீஸுடன் இணைந்தும் நான் செயற்பட்டு தேவையானவற்றைச் செய்வேன் என்வும் அவர் தெரிவித்தார்

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஸல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சாய்ந்தமருது கோட்ட கல்லூரி அதிகாரி ரஹ்மான், சுகாதார வைத்திய அதிபாரி டாக்டர் பாறூக், முன்னாள் அதிபர் ஐ.எல். ஏ மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ya-jpg2 ya-jpg2-jpg3

Web Design by The Design Lanka