சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

கட்டாரில் இயங்கி வரும் கட்டார் சாய்ந்தமருது மாளிகைக்காடு சமூகம்  சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 மாணவர்களுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இக் கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (08) அல்-ஜலால் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதீனின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கட்டார் சாய்ந்தமருது மாளிகைக்காடு சமூகத்தின் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு செயற்குழுவின் உறுப்பினர்களான ஆர்.எம்.தானீஸ் மற்றும் ஏ.ரோஷன் அக்தர் ஆகியோர் கலந்து கொண்டு இக் கற்றல் உபகரணங்களை அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதீன், உப அதிபர் டி.கே.எம்.சிராஜ் மற்றும் ஆசிரியர்களான ஏ.ஷியாம், ஐ.அஸ்லம் ஸுஜா ஆகியோர் முன்னிலையில் அம் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

        

Web Design by Srilanka Muslims Web Team